அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-01 19:00 GMT

சத்துணவு அங்கன்வாடிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதி உள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட்டு விட்டு சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை அவுரி திடலில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்