சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-01 20:45 GMT

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் குமரம்மாள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜார்ஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களுடைய கண்களில் கருப்பு துணித்துணி கட்டியிருந்தனர்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போன்று குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் சத்துணவு திட்டத்தில் இணைத்து சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 50 சதவீத இடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்