ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக கல்லூரி விளையாட்டு மைதானம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, தொழில்நுட்ப பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கல்லூரி வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.