அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் அண்ணாத்துரை கலந்து கொண்டு பேசினார்.
மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் விவசாயி பாண்டி தற்கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாண்டியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.