பாலக்கோடு:
பாலக்கோட்டில் உள்ள பொதுவுடைமை வங்கி முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வடக்கு வட்டார தலைவர் ராஜேந்திரன், தெற்கு வட்டார தலைவர் சிலம்பரசன், மாரண்டஅள்ளி நகர தலைவர் பால பார்கவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி. பங்குகளை முதலீடு செய்ததற்காக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தீர்த்தராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் நகர செயலாளர் ரகமத்துல்லா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வீரமணி, மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் நிலையம் அருகில் இருந்து காந்தி சிலை வரை காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர்.