நத்தத்தில் வீரமுத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நத்தத்தில் வீரமுத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் பூமி தலைமை தாங்கினார். தமிழர் தேசம் கட்சியின் மாநில செயலாளர் அழகர் முன்னிலை வகித்தார்.
துவரங்குறிச்சியில் நடந்த இருதரப்பினர் பிரச்சினையில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ததையும், நிர்வாகிகள் 5 பேரை கைது செய்த திருச்சி மாவட்ட போலீசாரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.