கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-24 20:30 GMT

தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் அழகேசன், திண்டுக்கல் நகர தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கட்டண சேனல்களின் விலை உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் விசாகனிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்