எலச்சிபாளையத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-23 19:00 GMT

எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் தேவராஜ், பழனியம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ரமேஷ், விஜய், கிட்டுசாமி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்