மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-01-31 18:45 GMT

நாமக்கல்:

கேங்மேன் பணியாளர்களுக்கு மின்வாரிய உத்தரவின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். கேங்மேன் ஊழியர்களை கள உதவியாளராக பதவி மாற்றம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திட்ட தலைவர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கேங்மேன் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பிற்கான உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்க வேண்டும். மின்வாரிய அலுவலகங்களில் ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரிய அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்