உத்தனப்பள்ளியில் 25-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Update: 2023-01-29 18:45 GMT

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் 25-வது நாளாக நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சிப்காட்டிற்கு விவசாய நிலங்களை அபகரிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில மகளிர் அணி தலைவி முத்துலட்சுமி, மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி, மாவட்ட அவைத்தலைவர் ராமன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தீபா, துணை செயலாளர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்