தேனியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி பங்களாமேட்டில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் விடுதலைசேகர், வைரமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணை அமைப்பு செயலாளர் தமிழரசி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.