பாப்பிரெட்டிப்பட்டி அருகே மயானம் ஆக்கிரமிப்பு: மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-01-06 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள நொனங்கனூர், ஆலமராத்தூர் கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி, மயானத்தை மீட்டு தரக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அம்புரோஸ் தலைமை தாங்கினார்.

விவசாய சங்க வட்ட செயலாளர் வஞ்சி, மாநில பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் மல்லையன், வட்ட தலைவர் தீர்த்தகிரி, வட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாநில உதவி செயலாளர் கண்ணகி, வட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு கலந்து கொண்டு, கோரிக்கை குறித்து பேசினார். இதில் மலைவாழ் மக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். முடிவில் சங்க மாவட்டநிர்வாகி சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்