அரூரில்உள்ளாட்சி பணியாளர்கள் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-31 18:45 GMT

அரூர்:

அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட உள்ளாட்சி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் வேடன், செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் ஆணையம் அமைப்பது, டேங்க் ஆபரேட்டர், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு காலதாமதம் இன்றி ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் தமிழ் குமரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் மணி, மாவட்ட தலைவர் முருகன், சுதர்சனம், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்