இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பாலாஜி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் ராணி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.