சாலை பணியாளர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-23 18:45 GMT

சாலை பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு உரிய தளவாடங்கள், மழை கோட், காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களில் உயிர் நீத்தோரின் குடும்பத்தில் இருந்து கருணை நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன், இணை செயலாளர் இளங்கோவன், சங்கத்தின் மாநில பொருளாளர் தமிழ், துணை தலைவர்கள் விஜயன், ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாலை பணியாளர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட முதுநிலை பட்டியலின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை தொலைத்தூர பணிகளுக்கு தொடர்ந்து அனுப்புவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் மயில்சாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்