கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-09 18:45 GMT

கிருஷ்ணகிரி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் லுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கைகள் குறித்து பேசினார். செயலாளர் ஜெய்சங்கர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் தேவிசோனா, மாநில செயலாளர்கள் ஹேமநந்தினிதேவி, மஞ்சுளா, துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் மாணவர்களுக்கான காலை, சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தம், புற ஆதார முகமை முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்