போலீஸ் நிலையத்தை முற்றுகையிட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சி

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சி செய்தனர்.

Update: 2022-11-07 19:00 GMT

மணல்மேடு போலீஸ் நிலைய குற்ற பட்டியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதி திராவிட இளைஞர்களின் பெயரினை சேர்த்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மணல்மேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமை தாங்கினார். முன்னதாக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை அகற்றி போலீஸ் நிலையம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி அங்கு மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். போராட்டம் காரணமாக கும்பகோணம்- சீர்காழி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்