பழனியில் திராவிடர் கழகத்தில் ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியில் திராவிடர் கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-04 16:48 GMT

பழனி பகுதி திராவிடர் கழகம் சார்பில், பழனி வேல் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக துணை செயலாளர் தில்ரேஸ்பானு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி மொழி திணிப்பு, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வில் ஆங்கிலத்தை ஒழிக்க முயற்சிப்பது போன்ற பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழகம் மற்றும் திராவிடர் மாணவர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்