தேனியில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்

தேனியில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-25 17:25 GMT

ஏ.ஐ.டி.யூ.சி. தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோவை மாநகராட்சியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ள தூய்மை பணியாளர்களின் போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்