தேனியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-21 16:31 GMT

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி மாவட்டத்தில் மாணவன் மரணத்துக்கு நீதிகேட்டு போராடிய தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர், மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தியும், தென்காசி மாவட்ட போலீசாரை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்