நாமக்கல்லில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.
அ.ம.மு.க. ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் முத்து சரவணன், பழனிவேல், நல்லியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்க்கும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தொழில்நுட்ப பெண்கள் பிரிவு செயலாளர் மேகலா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை தலைவர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.