ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து நாமக்கல்லில் மக்கள் நல சேவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து நாமக்கல்லில் மக்கள் நல சேவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-23 18:55 GMT

சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆ.ராசா மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் மக்கள் நல சேவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவி அருள்மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவி தமிழரசி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் கோசஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்