தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி பங்களாமேட்டில், மதுரை சாலையோரம் நீண்ட காலமாக மக்கள் வசிக்கும் வீடுகளை காலிசெய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மிரட்டுவதாகவும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு கட்சியின் தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், முருகன், முனீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும், குடியிருக்க மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் கொடுத்தனர்.