பழனி, கொடைக்கானலில் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பழனி, கொடைக்கானலில் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-18 19:14 GMT

திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து பழனி மயில் ரவுண்டானா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ராஜா, வெங்கடேஷ், பழனி நகர தலைவர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி சார்பில் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, ஆ.ராசா எம்.பி. நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர்.

நிலக்கோட்டை நடராஜர் கோவில் முன்பு இந்து முன்னணியினர், மதுரை கோட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆ.ராசா எம்.பி. பதவி விலக வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, ஒன்றிய தலைவர்கள் செல்வம், பரமேஸ்வரன், நகர தலைவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்