தர்மபுரியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் தர்மபுரி கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் மந்திரி தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பாலிசிக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரர்களுக்கு எதுவாக சேவை புரிய வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் ஒப்புகை ரசீது வழங்க வேண்டும். 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்.
பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.