சாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

சாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-22 15:47 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா பெல்லுார், ஒசபேட்டை, தளி, கெலமங்கலம், தேவேகவுடனதொட்டி, நாகசந்திரம், மாருப்பள்ளி, ஏ.செட்டிப்பள்ளி கிராமங்களில் வசித்து வரும் ஜங்கம் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் என்ற சான்றிதழ் தான் வழங்க முடியும் என வருவாய்த்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்தநிலையில் தங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று சான்றிதழ் வழங்கக்கோரி பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் குருநாதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்