பழனியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழனியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி தாலுகா சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில், பழனி மயில் ரவுண்டானா பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் மனோகரன், பழனி நகராட்சி முன்னாள் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வழங்க வேண்டும். அரிசி, பால் போன்ற பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் மின்கட்டணம், சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் தொழிற்சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.