இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-16 17:07 GMT

காரைக்குடி, 

நடிகர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து காரைக்குடி ஐந்துவிளக்கு பகுதியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

இதில், நகர பொதுச்செயலாளர் ரமேஷ், பாஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், நகர தலைவர் பாரதி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கனல் கண்ணனை கைது செய்ததை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்