உத்தமபாளையத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-10 16:25 GMT

தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் உத்தமபாளையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணிமுஸ் தலைமை தாங்கினார்.

தேனி வட்டார அதிபர் முத்து, ரவிச்சந்திரன், பங்குதந்தை ஜோசப் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் வன்னியரசு கலந்துகொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மறைவட்ட எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு பணிக்குழு தலைவர் மாணிக்கவாசகர், செயலாளர் சந்தியாகப்பன் உள்பட பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்