தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-28 17:49 GMT

தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் மணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், கூட்டமைப்பு நிர்வாகிகள் கிஷோர்குமார், ராமசுந்தரம், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொலைத்தொடர்பு துறையில் 14917 செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆப்டிக்கல் பைபர் கேபிள்களை குத்தகைக்கு விடக்கூடாது. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கான 4-ஜி சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்