நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் டி.ஓ.டி. ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராமசாமி, பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதிய உயர்வை உடனடியாக வழங்க கோரியும், பொதுத்துறை அகவிலைப்படியை உடனே வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் மத்திய அரசின் மருத்துவ திட்டத்தை முறைபடுத்தி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 2019-ம் ஆண்டு விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு மறுக்கப்பட்ட ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.