மத்திய அரசை கண்டித்து புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பாலக்கரையில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட அமைப்பாளர் வீராசாமி தலைமை தாங்கினார். சிகாமணி, வீரராஜ், புகழேந்தி, ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் தனவேல் கலந்து கொண்டு் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இளைஞர்களுக்கு வேலை வழங்குதல், வெறுப்பு அரசியலை கைவிடுதல், அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.