திருச்செங்கோட்டில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். அரசு பொது துறையான பி.எஸ்.என்.எல். பழுது பார்க்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, கிளை செயலாளர்கள் ராஜலிங்கம், பரந்தாமன், மாவட்ட உதவி தலைவர்கள் ராமசாமி, லாரன்ஸ், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.