மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்;
மக்கள் நல பணியாளர்களை மதிப்பூதியத்தில் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் பணி நியமனம் செய்ய வேண்டாம். மக்கள் நல பணியாளர்கள் என்ற பெயரில் பணி வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இறந்த பணியாளர் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் நல பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். திருவாரூர் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.