தர்மபுரியில் செவிலிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் செவிலிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-06 17:25 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் செவிலிய உதவியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. ஆஷா பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தீபா, பொருளாளர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில செயலாளர் வசந்தகுமாரி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி, உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன், பெண்கள் சுகாதார தன்னார்வலர்கள் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் மகேஸ்வரி, மாவட்ட தலைவர் கிருஷ்ணம்மாள், கட்டுமான சங்க பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்