காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக சித்தரித்ததை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசங்கர், நரேந்திரன், மகளிர் அணி மாவட்ட தலைவர் காளியம்மாள் ஆகிய முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது ராகுல் காந்தியை அவமதித்ததை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் மணி, ஞானசேகர், கிருஷ்ணன், காமராஜ், வெங்கடாசலம், பெரியசாமி, வஜ்ஜிரம், நகர தலைவர்கள் தங்கராஜ், கணேசன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சிவலிங்கம், சென்னைகேசவன், தங்கவேல், சிறுபான்மை அணி முபாரக், எஸ்.சி., எஸ்.டி. அணி சம்பத்குமார், நிர்வாகிகள் நடராஜன், ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வேடியப்பன் நன்றி கூறினார்.