தர்மபுரியில்ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-10-01 19:00 GMT

உலக முதியோர் தினம் மற்றும் பென்சன் பாதுகாப்பு நாளையொட்டி தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில இணை செயலாளர் குப்புசாமி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் விஜியன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், எல்.ஐ.சி. ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்