திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அண்ணா நகர் கிளைகளின் சார்பில் மயான வசதி செய்து தரக்கோரியும், ஆனங்கூர் ரெயில்வே கேட் பகுதியில் ேவகத்தடை அமைக்ககோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு செயலாளர் சூர்யா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் வேலாயுதம், நகர செயலாளர் ராயப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.