நிலக்கோட்டையில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நிலக்கோட்டையில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-08-06 20:00 GMT

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், அந்த மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மணிப்பூர் மாநில அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்ப்புலிகள் கட்சியின் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயலாளர் அறிவரசு, மாவட்ட நிதி செயலாளர் அழகர், மாவட்ட பொருளாளர் கணேஷ்பிரபு, மாநில நிர்வாகிகள் முத்துக்குமார், பெரியார்மணி, சின்னக்கருப்பன், மண்டல செயலாளர் போஸ்வீரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்