அம்மாபேட்டை அருகே குறிச்சி மலையில் உள்ள கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும்; தமிழ் புலிகள் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
அம்மாபேட்டை அருகே குறிச்சி மலையில் உள்ள கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும்; தமிழ் புலிகள் கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
அம்மாபேட்டை
தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் பூதப்பாடி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ராகவன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இளைஞர் அணி பொறுப்பாளர்கள் ஜெயசூர்யா, மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் குருசெம்பன், மாவட்ட கரும்புலி செயலாளர் நந்தினி, மாவட்ட நிதி செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாரதிராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழக மக்களை வஞ்சிக்காமல் உடனடியாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
அம்மாபேட்டை குறிச்சி மலையில் கொள்ளை போகும் கனிம வளங்களை கனிமவளத் துறையும், மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து சிறப்பு அதிகாரிகளை நியமித்து பாதுகாக்க வேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பூதப்பாடி முகாம் செயலாளர் சூர்யா நன்றி கூறினார்.