திருக்கோவிலூர் அருகேஇளம் பெண்களை வீட்டில் வைத்து விபசாரம்புரோக்கர் உள்பட 3 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே இளம் பெண்களை வீட்டில் வைத்து விபசாரம் செய்த புரோக்கர் கைது செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள தொட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார், அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது மரூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் மனைவி கலா( வயது 35) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், அங்கு சந்தப்பேட்டை உண்ணாமலை நகரை சேர்ந்த சிவா (48), அரகண்டநல்லூர் அருமலை கிராமத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (49) ஆகியோர் வந்திருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த 2 இளம் பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.