சேலத்தில் விபசாரம்: கணவன்- மனைவி உள்பட 7 பேர் கைது-2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலத்தில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்- மனைவி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-07-27 20:48 GMT

சேலம் நெடுஞ்சாலைநகர் கிருஷ்ணா தெருவில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிந்தது. அங்கிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தை சேர்ந்த பாலமுரளி (வயது 40). அவருடைய மனைவி திவ்யா (36). பூலாவரியை சேர்ந்த தியாகராஜன் (31), சாமுவேல் (35), மோகன்குமார் (32) கவுசல்யா (30), தேவா (39) ஆகியோர் என்பது தெரிந்தது. திவ்யா ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்து உள்ளார். பாலமுரளி, திவ்யா ஆகிய 2 பேரும் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதும், இதற்கு மற்ற 5 பேர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் விபசார தொழில் நடத்திய திவ்யா அதற்கு உடந்தையாக இருந்த தியாகராஜன் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்