தங்கும் விடுதியில் விபசாரம்; 2 பேர் கைது
தங்கும் விடுதியில் விபசாரம்; 2 பேர் கைது;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பாக பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் போது போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த வெள்ளிங்கிரி (வயது 55), சாமுவேல் (52) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கு இருந்த 2 பெண்களையும் மீட்டனர்.