விருத்தாசலத்தில் வீட்டில் விபசாரம்; வக்கீல், 2 பெண்கள் கைது 4 அழகிகள் மீட்பு
விருத்தாசலத்தில் வீட்டில் வைத்து விபசாரம் செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 4 அழகிகளை மீட்ட போலீசார், அங்கு இருந்த வக்கீல் ஒருவரையும் மடக்கி பிடித்தனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் ஆலடி ரோடு பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவானந்தம், கொளஞ்சி, தலைமை காவலர்கள் ஜெயந்தி, ராஜசேகர், காவலர் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதில், சக்தி நகரை சேர்ந்த சித்ரா(வயது 40) என்பவர் தனது வீட்டில் வைத்து விபசாரம் நடந்ததை போலீசார் கண்டுபிடித்தனா். இதையடுத்து வீட்டில் அதிரடி சோதனையிட்டனர். அப்போது, விருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சத்தியா (25), சித்ரா ஆகியோர் 4 அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
மேலும் போலீசாரின் அதிரடி சோதனையின் போது, அங்கு பிஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த வக்கீலான ராயர்(29) என்பவரும் அங்கு இருந்தார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ரா, சத்தியா மற்றும் ராயர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 4 அழகிகளை மீட்டு கடலூர் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர்.