கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-06-02 20:28 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள ஆண்டிமடம் தாலுகா குவாகம் பாரதி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் கொளஞ்சிநாதன். இவருக்கு சொந்தமான நிலத்தின் முன்பகுதியை கோடாலி கிராமத்தை சேர்ந்த சந்திரகாசி மகன் ரங்கநாதன் ( வயது 38) என்பவருக்கு கொளஞ்சிநாதனின் தந்தை சுந்தரமூர்த்தி விற்பனை செய்துள்ளார். இதையடுத்து ரங்கநாதன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதையை அடைத்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கொளஞ்சிநாதன் தனது வயலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து ரங்கநாதனிடம் கேட்டபோது கொளஞ்சிநாதனை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கொளஞ்சிநாதன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்