தந்தை, மகனை தாக்கிய 17 பேர் மீது வழக்கு
நெல்லை அருகே தந்தை, மகனை தாக்கிய 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 24). சம்பவத்தன்று 2 பேரும் நெல்லை அருகே தெற்கு வெட்டியபந்தியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது அந்த பகுதியில் சிலர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதை வேல்முருகன், சதீஷ்குமார் ஆகியோர் கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள், 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி, தூத்துக்குடி மாவட்டம் நாட்டார்குளத்தை சேர்ந்த வினித், தங்கபாண்டி, வினிஸ், பாலா, சிபிராஜ், ஆகாஷ், நாதன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனா்.