சட்ட விரோதமாக மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு
சட்ட விரோதமாக மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவரை சிலர் கடத்தி சென்றதாக கூறி கரூர்-கோவை ஈரோடு சாலையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆண்டாங்கோவில் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கரூா்- கோவை சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே அ.தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், ஆண்டாள் தினேஷ், செல்வகுமார், நவலடி கார்த்தி, சுரேகா பாலச்சந்தர், சேரன் பழனிச்சாமி உள்பட பலர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடி அப்பகுதி வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.