ஓசூர் அருகே மண் கடத்தியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-06-05 02:15 GMT

ஓசூர்:

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பல்வேறு பகுதிகளில் மண் கடத்துவதாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தபோது ஓசூர் அருகே ஒன்னல்வாடி பகுதியில் டிப்பர் லாரியில் மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மண் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 டிப்பர் லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு துணை போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக சென்று ஓசூர் சிப்காட் பகுதியில் மண் கடத்தி விற்க முயன்ற மேலும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். இந்த அதிரடி ஆய்வின்போது மண் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்