சொத்துப் பட்டியல் விவகாரம் : ' நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்' - கனிமொழி எம்.பி.

சொத்துப் பட்டியல் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Update: 2023-04-19 17:30 GMT

கோப்புப்படம்

மதுரை,

தூத்துக்குடி செல்ல சென்னையிலிருந்து விமானம் மூலம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, இன்று மாலை மதுரைக்கு வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், " திமுகவினருக்கு எதிராக சொத்துப் பட்டியல் குறித்து தகவல் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நிச்சயமாக நானும் வழக்கு தொடர்வேன். அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஸ்டெர்லைட்டை எதிர்த்து திமுக அரசு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது. மக்களின் குரலை எதிரொலிக்கிறோம். நிச்சயமாக நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்" என்று கனிமொழி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்