இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம்
வந்தவாசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வு பொதுத்துறை விற்பனை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் வட்டார தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், நகர்ப்புற வளர்ச்சி மேம்பாடு, வரி சுமை, உணவு மற்றும் மருந்து பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியினங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
இந்த பிரசார இயக்கம் பழைய பஸ் நிலையம், தேரடி, புதியபஸ் நிலையம், ஐந்துகண் பாலம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார குழு உறுப்பினர் சுகுமார் கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.